விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கண்மணி மனோகரன். இந்த சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இதில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இவருக்கும் சன் தொலைக்காட்சியின் நடிகரும் தொகுப்பாளருமான அஸ்வத் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை கண்மணி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.