
விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு 96 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கினார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரசிகர்கள் 96 திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
சமீபத்தில் படத்தின் இயக்குனர் பிரேம்குமார், 96 படத்தின் இரண்டாவது பாகத்தை எழுதி முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் கூறியதாகவும் அவருக்கு பிடித்திருந்தது எனவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் படத்தை உருவாக்கும் ஆர்வம் வந்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோரின் கால்ஷீட் அடிப்படையில் படம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.