தமிழ் சினிமாவை பொருத்தவரையில் பிரபலங்கள் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய விஷயங்களை ஆர்.ஜே சுசித்ரா தொடர்ந்து பேசி வருகின்றார். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்தது தான்.

அவருடைய தற்கொலைக்கான காரணத்தை தற்போது ஆர் ஜே சுசித்ரா கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அதனைப் போலவே மீராவும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்கு விஜய் ஆண்டனி மறுப்பு தெரிவித்த நிலையில் மனம் உடைந்த மீரா தற்கொலை செய்து கொண்டார் என அவர் கூறியுள்ளார்.