பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. விஜய் தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் தலைவர்கள் என அனைத்தையும் விளக்கமாக கூறினார். நேரடியாக அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அரசியல் தலைவர்கள் விஜயை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் அரசியல் கொள்கை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் விஜய் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். மாவு தான் வீணாகப் போகும் என பதில் அளித்துள்ளார்.