
சென்சேஷல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்தான் கயாடு லோகர். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடைய முதல் படமே வெற்றியை கொடுத்துள்ளது. அடுத்ததாக அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்களுடைய செலிப்ரட்டி கிரஷ் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், தளபதி விஜய் தான் என்னுடைய கிரஷ் என்று கூறினார். மேலும் விஜய் நடித்தது எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது தெறி தான் என்றும் கூறியுள்ளார். ஆனால் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் உரையாடலில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று ரசிகர் கேள்வி கேட்க தனுஷ் தான் எனக்கு பிடிக்கும். வேறு யாருக்கும் இடமில்லை என்று கூறியுள்ளார். இதை கண்டுபிடித்த ரசிகர்களோ மாறி மாறி பேசி மாட்டிக்கொண்டார் கயாடு லோஹர் என்று கூறி வருகிறார்கள்.
Before she got into Vijay's mouthpiece AGS network.. pic.twitter.com/PwbuMlLYar https://t.co/YEsgfkN8zq
— Trollywood 𝕏 (@TrollywoodX) March 6, 2025