
தமிழக வெற்றி கழகத்தில் பொறுப்பு வழங்குவதற்கு பணம் கேட்பதாகவும் ஜாதி பார்த்து பதவி வழங்குவதாகவும் நிர்வாகிகள் பலர் குற்றச்சாட்டுகளை அடுத்தடுத்து முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகியான சத்யா நந்தகுமார் என்பவரும் தமிழக வெற்றி கழகத்தில் ஜாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக தற்போது பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் விஜயின் தீவிர ரசிகையாக இருக்கும் நான் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மக்கள் பணி செய்து அதனை என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறேன். ஆனால் என் மீது கேஸ் இருப்பதாக கூறி எனக்கு தேனி மாவட்டம் மகளிர் அணியில் பொறுப்பு கொடுக்க வேண்டாம் என ஆனந்த் சாரே சொல்லிவிட்டார் என பொறுப்பு கொடுக்க மறுத்துவிட்டனர். தேனி மாவட்ட பொறுப்பாளர் என் மீது 4 கேஸ் இருப்பதால் எனக்கு பொறுப்பு கொடுக்க வேண்டாம் என்று கூறிய நிலையில் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் பொறுப்பு கொடுக்கிறார்கள்.
அனைவரது முன்னிலையிலும் என் மீது 2020ல் ஒரு கேஸ் 2021ல் ஒரு கேஸ் என அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் என்னுடைய அப்பா பெயர் என்னவென்று தெரியுமா என கேட்டதற்கு தெரியாது என்று கூறி விட்டார்கள். என்னோட அப்பா பேரு தெரியாம என் மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறது என்று உங்களால் எப்படி சொல்ல முடிகிறது என்று நான் கேட்டபோது அதற்கு நான் தான் கழக வக்கீல் என்று கூறினார். இங்க வந்து எந்த ஒரு பொண்ணு வேலை பார்த்தாலும் அவர்களை மட்டமாக பேசுவது தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது. என் மீது கேஸ் இருக்கிறது என்று அவர்களால் இதுவரை ஆதாரம் கொடுக்க முடியாது நிலையில் என் மீது எந்த ஒரு வழக்குமில்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.
இதை நான் ஆனந்த் சாரிடம் எடுத்துச் சென்று காட்டிய போதும் எந்த பலனும் இல்லை. அவர் எந்த ஒரு தப்பும் இல்லாத பெண் மீது எதற்காக இப்படி பழி போடுகிறீர்கள் என்று கேட்டிருக்கலாம். ஆனால் அவரோ என் வேலையே எனக்கு பெரிதாக இருக்கிறது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனந்த் சாரே இப்படி சொல்லிவிட்டு போகும்போது நாங்கள் ஏன் வேலை பார்க்க வேண்டும். வேலை பார்த்த எங்களுக்கு என்ன அங்கீகாரம். எங்களை அசிங்கப்படுத்துறாங்க.
எந்த இடத்தில் போய் நியாயத்திற்காக நின்றாலும் உடைத்தது தப்பு என்ற விதத்தில் அசிங்கப்படுத்துகிறார்கள். அப்படி எனில் நான் வேலை பார்த்ததை தளபதி நாளை அங்கீகரித்தால் கூட அது தவறுதானா. அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் வேலை பார்க்க வேண்டும். தளபதி எழுதிய கடிதத்தை கொடுக்க வேண்டாம் என்று சொல்லியபோதே நான் உடைந்து விட்டேன். அதிலிருந்தே நான் தளபதிக்காக வேலை பார்க்கவில்லை என்னை வேலை பார்க்கவும் அவர்கள் விடவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது எனவும் அசிங்கப்படுத்துகிறார்கள் என்றும் பெண் நிர்வாகி குற்றசாட்டினை முன் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது எதுவும் விஜய் அண்ணாவுக்கு தெரியாது எனவும் அவரிடமாவது எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நான் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எவ்வித களங்கமும் ஏற்படுத்த இச்செய்தியை பதிவிடவில்லை, என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு தளபதி விஜய் அண்ணாவிடம் மட்டுமே நியாயம் கிடைக்கும் என இந்த கோரிக்கையை சமர்ப்பிக்கிறேன்..!@tvkvijayhq @actorvijay @AadhavArjuna @Ibrahim_0369… pic.twitter.com/84sVaYbSFU
— TVK Sathya Nanthakumar (@TVK_Sathya) February 3, 2025