தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக திகோட் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் தன்னுடைய 69 ஆவது படமான ஜனநாயகன் படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு என்பது மிகுந்த அளவில் இருக்கிறது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று பட குழு அறிவித்துள்ளனர். ஆனால் சூட்டிங் நிறைவடைய நாளாகும் என்பதால் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி அதர்வா மற்றும் நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் விஜய்யின் படத்துடன் எந்த காரணத்தைக் கொண்டும் தன்னுடைய படம் வெளியாக கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் உறுதியாக இருக்கிறாராம். இதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அல்லது பின்பு தான் பராசக்தி வெளியாகுமாம். மேலும் இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.