
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி, குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இவர் வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் சமீப காலமாக ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் தற்போது ரூ.100.18 கோடி வசூலை எட்டியுள்ளதாக பட குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி சமீப காலமாக ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகாத நிலையில் தற்போது அவர் நடித்த மகாராஜா படம் வசூலில் பட்டையை கிளப்பி வருவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.