2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண வரும் ரசிகர்கள், தங்களது போட்டியின் டிக்கெட்டை காட்டி, மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சலுகை, போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்குள் மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.