இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரியின் திருமண விழாவிலிருந்து இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தோனியும் ரெய்னாவும் தங்கள் நடன அசைவுகளைக் காட்டுவதைக் காணலாம். கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பந்தின் சகோதரி சாக்ஷி இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமண நிகழ்ச்சிகள் முசோரியில் நடைபெறுகின்றன.

துபாயில் ஞாயிற்றுக்கிழமை  சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ரிஷப் பந்த், திங்கள்கிழமை காலை இந்தியாவுக்குப் பயணம் செய்து குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இந்த வார தொடக்கத்தில் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய பந்த், மெஹந்தி, சங்கீத் மற்றும் ஹால்டி விழாக்களில் பங்கேற்றார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியும் சுரேஷ் ரெய்னாவும் உற்சாகமாக நடனமாடியுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.