நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் 3ல் இருந்து விக்ரம் லெண்டர் நிலவில் தரையிறங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகின்ற நிலையில் பிரக்யாண் ரோவர் விக்ரம் லாண்டரை படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. சந்திரயான் தரை இறங்கி ஆறு நாட்கள் கழித்து தரையிறங்கிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஆய்வு செய்து வருகிறது. அதோடு நேற்று சல்பைட் தாது நிலவில் இருப்பதையும் கண்டறிந்தது. இந்த நிலையில் தான் ஆய்வு மேற்கொண்டிருந்த பிரக்யான் ரோவர் விக்ரம் லண்டரை நேவிகேஷன் கேமரா மூலம் படம் பிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.