
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறிய யானையின் செயல் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. வனப்பகுதியை ஒட்டிய சாலையில், யானைமேல் மாஹூத் ஏறியபடி ஒரு பெரிய யானையும், அதன் பின் செல்லும் ஒரு குட்டி யானையும் தெரிகின்றன. அந்த நேரத்தில் சாலையோரத்தில் ஒரு பெண் தனது தட்டில் தர்பூசணிப் பழங்களை வைத்திருந்தார்.
குட்டி யானை நேராக சென்று, அன்பாக அந்தப் பழங்களைப் பார்த்து, அதைப் பெற்றுக்கொள்கிறது. இந்த அழகான தருணம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, ‘Nature is Amazing’ என்ற X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பகிரப்பட்டதுடன், 29 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
Baby elephant asking for watermelon pic.twitter.com/n9VLDQJLAL
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 7, 2025
வீடியோவில், குட்டி யானை பழங்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடும் அதே நேரத்தில், பெரிய யானையும் வந்து சேர்கிறது. இரண்டும் அமைதியாக பழங்களை பகிர்ந்து சாப்பிடும் அந்த நிமிடம் அனைவரது மனதையும் உருக்கும் வகையில் உள்ளது.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான இயற்கையான பாசத்தையும், நம்பிக்கையையும் இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ ஒரு சகஜமான தருணம் என்றாலும், அதன் அழகு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த வீடியோக்கு பார்வையாளர்கள் பலரும் உருக்கமான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர் “இது என் நாளையே மாற்றிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இந்த வீடியோவை அலுவலகங்களில் லூப்பில் போட்டால், வேலை பளுவில் இருந்து ஓரளவு ஓய்வுக் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
“அந்த குட்டி யானைக்கு என் பழக்கட்டையே கொடுத்து விடலாம்” எனக் குறிப்பிட்ட ஒருவர் கருத்தும் பலரது மனதையும் தொட்டுள்ளது. இந்த வீடியோ, விலங்குகளின் உண்மை இயல்புகளைப் பற்றியும், மனிதரின் மனதை தொட்டுத் திரும்பச் செய்யும் அழகையும், இயற்கையின் சிறப்பையும் நிரூபிக்கிறது.