இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத், பஞ்சாப், பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனால் தற்போது நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கும் நிலையில் மூன்று அணிகளிடம் கடும் போட்டி நிலவுகிறது.

அதன்படி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிரச்சனை இல்லாமல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். மும்பை அணி இரண்டு போட்டிகளில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுடன் மோத இருக்கிறது.

அதன்பிறகு டெல்லி அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும். ஒருவேளை ஏதாவது ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் லக்னோ மற்றும் மும்பை அணிகளின் போட்டிக்காக காத்திருக்க வேண்டும். அதன் முடிவில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும். டெல்லி அணி அடுத்த போட்டிகளில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுடன் மோத இருக்கிறது.

மேலும் லக்னோ அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதாவது மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களது இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் தான் லக்னோவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஒருவேளை லக்னோ‌ அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்காது. மேலும் தற்போது லக்னோ மற்றும் ஹைதராபாத் இடையே போட்டி தொடங்கியுள்ள நிலையில் இது லக்னாவுக்கு வாழ்வா சாவா போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.