
பிரபல கவர்ச்சி நடிகை சகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரிச்சா தத்தா. இவர் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப்தொடர் வெளியாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ரிச்சா தத்தா சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, என்னை புகழ்வதால் எனக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
ஏனெனில் நான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. ஒரு புதிய படத்தில் நடிக்க நடிகை தேர்வுக்கு அழைப்பார்கள். நானும் செல்வேன். எப்படியாவது நான் செலக்ட் ஆகி விடுவேன். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு பிரபல நடிகரின் மகளோ, குறிப்பிட்ட ஹீரோவின் காதலியோ ஹீரோயின் ஆக தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் என்னை ரிஜெக்ட் செய்து விடுவார்கள். மேலும் இப்படி வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்காக என்னை பலமுறை பலியாக்கினார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கூறும் நிலையில் தற்போது நடிகர் ரிச்சா தத்தா கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.