இந்தியாவில் வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மத்திய அரசும் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது. அதே சமயம் வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இதனை அவர் பரிசீலனை செய்து முடிவு எடுத்து இந்திய வங்கிகள் சங்கத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே சமயம் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது குறித்து மத்திய அரசு  விரைவில் சாதகமான முடிவை எடுக்கும் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்துவதற்கும் இந்திய வங்கிகள் சங்கம் கடந்த ஆண்டு வங்கி ஊழியர்களுடன் ஒப்பந்தம் செய்தது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.