
அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் படகுழுவால் அறிவிக்கப்பட்டது. அதாவது ரம்யா என்ற ரோலில் த்ரிஷா நடிக்கிறாராம்.
படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து மார்ச் 28 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது. டீசர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் தமிழ் திரை உலகில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனை படைத்துள்ளது. இந்த டீசரில் அஜித் பல கெட்டப்பில் தோன்றியிருந்தார். இதில் அஜித் அணிந்திருந்த சட்டை பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் அந்த சட்டையின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சட்டையின் நிலையானது சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.