உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அனைத்துமே  பயனுள்ளதாகவே இருந்தது. அப்படிபட்ட அப்டேட்களில் டெலிட் செய்த மெசேஜ்களை எப்படி மீண்டும் பார்ப்பது என்பதை இப்போது பார்க்கலாம். அதாவது ஒருவர் டெலிட் செய்த மெசேஜ்களை திரும்பவும் மீட்டெடுக்க கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் அதற்கான செயலிகள் உள்ளது.

அவை டெலிட் செய்யப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கவும் அவற்றை மீண்டும் படிக்கவும் அனுமதிக்கிறது. அந்த வகையில் whatsapp பயனாளிகளுக்கு செய்திகளை மீட்டெடுக்க கூகுள் பிளே ஸ்டோரில் notisave என்ற செயலி கிடைக்கிறது . இந்த செயலி வாட்சப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க மட்டும் உதவாமல் வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மீட்டெடுக்கவும் உதவுகிறது. ஆனால் இதுios  பயனாளிகளுக்கு பயன் அளிக்காது.