உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் வாட்ஸ்அப் நிறுவனம் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட எடிட் சாட் வசதி சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலமாக நாம் தவறுதலாக அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்து கொள்ள முடியும்.

அதனைப் போலவே தற்போது மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு சாட் புதிய இடை முகத்தை (Interface) உருவாக்குகிறது. அதில் சுயவிவரம், தனி உரிமை மற்றும் தொடர்புகள் என்ற மூன்று புதிய ஷார்ட்கட் அமைப்புகள் இருக்கும். அதன் மூலமாக பயணங்கள் எளிதாக செட்டிங்ஸ் அமைப்பிற்கு செல்லலாம். இதனால் இந்த புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. இந்த அம்சம் மூலம் போனின் வாட்ஸ் அப் ஸ்கிரீனை மட்டுமல்லாமல் , மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானாலும் பயனர்கள் ஷேர் செய்துக் கொள்ள முடியும்.