தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வபோது மழை வந்து குளிர்வித்து செல்கிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.