இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சமமான மாதாந்திர இஎம் ஐ வட்டி விகிதங்களை மீட்டமைப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை ஆர்பிஐ கடந்த வாரம் வெளியிட்டது. அதில் இஎம்ஐ அல்லது கடன் காலம் அல்லது இரண்டிலுமே ஏதேனும் மாற்றம் அல்லது உயர்வு ஏற்பட்டால் அது உடனடியாக முறையான வழிகள் மூலமாக கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் emi  வாங்கப்படும் தனிநபர் கடன்களில் கடனாளிகளின் முறையான தொடர்பு அல்லது அனுமதியின்றி கடன் காலத்தை நீட்டிப்பது குறித்து புகார் வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இஎம்ஐ தொகை உயர்த்துவது, இஎம்ஐ காலத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை சில வங்கிகள் செய்து வருகிறது. இதனால் வட்டி விகிதங்களை மீட்டமைக்கும் பொழுது கடன் வாங்குபவர்களுக்கு அவர்களுடைய நிலையான விகிதத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் எனவும் கடனுக்கான காலப்பகுதியில் வட்டி விகிதத்தை மாற்றுவதற்கு கடன் வழங்குபர் எத்தனை முறை அனுமதிக்கப்படுவார் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று RBI தெரிவித்துள்ளது.