ஆந்திர மாநிலத்தில் தேவரா பவானி பிரசாத் என்பவர்  வசித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி பிரசாத் தனது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபத்தில் பிரசாத் நான்கு இரும்பு சாவிகளை விழுங்கியுள்ளார்.

பின்னர் பிரசாத்துக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அதிநவீன லேபரோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த சாவிகள் அகற்றப்பட்டது. தற்போது அந்த வாலிபரின் உடல்நலம் சீராக உள்ளது.