நடிகர் அஜித் தன்னிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி தரவில்லை என வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றஞ்சாட்டியிருப்பது கோலிவுட்டை பரபரப்பாகியுள்ளது. கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  “அஜித் பெரிய ஜென்டில்மேன் கிடையாது. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தன்னிடம் கடன் வாங்கிய அஜித் இன்று வரை திருப்பி தரலை. ஒரு படத்தில் நடிப்பதாகவும் கூறியவர் கண்டுகொள்ளவே இல்லை” என்றார்.