விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் சீட் பெல்ட்கள் கட்டாயக் கருவியாக மாற்றப்பட்டாலும், சீட் பெல்டை ஓட்டுநர்களும் பயணிகளும் அணிவதில்லை. காரில் செல்லும்போது, சறுக்கல் அல்லது சுழல் ஏற்பட்டால், உங்கள் சீட் பெல்ட் உங்களை பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கும். ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, வளைக்காதபோது மோதல் ஏற்படுவது அதிகரிக்கிறது. அப்போது, நீங்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தால் சிறிய காயங்களுடன் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்துள்ள ஓட்டுநர், மற்றொருவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஒரு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்ட நிலையில், இனி இரட்டை அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரள மாநிலம் முழுவதும் AI கேமராக்கள் அமைக்கப்பட்டு 7896 போக்குவரத்து  விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலபோக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளார். இதில் சீட் பெல்ட் அணியாததே அதிகம் என தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், கேரளாவிற்கு காரில் செல்லும் அணைவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்.