கர்நாடக அரசில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் நேரத்தில் சொல்லிய வாக்குறுதியின்படி இலவச அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அரசு அறிவித்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்திய உணவுக் கழகம் மூலமாக அரிசி வழங்க முடியாது என ஒன்றிய அரசு கடிதம்எழுதியுள்ளது.

தாங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் மூலமாக அரசி விற்பனை செய்ய தயாராக உள்ளோம், ஆனால் மாநில அரசுகளுக்கு டெண்டர் இல்லாமல் திறந்த வெளி சந்தையில் விற்பனை செய்வதை தற்போது தடை செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு ஏழைகளுக்கான நலதிட்டத்தில் பாஜக அரசியல் செய்வதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு