கர்நாடகாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு வாகனம் வாங்குவதற்கு அரசு தரப்பில் 3 லட்சம் மானியம் வழங்க  இருப்பதாக அம் மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆட்டோ ரிக்ஷாக்கள், சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு சிறுபான்மை சமூகத்தினர் இந்த மானியத்தை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகயும்  அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த மானியத்தை பெறுவதற்கு கட்டாயமாக கர்நாடகாவில் நிரந்தர குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

சிறுபான்மை சமூகத்தினரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்திலும் பயன் பெற்றிருக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.