வாகனங்களுக்கான வேக வரம்பு இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் அதிகமாக 120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாலைகளில் தற்போது அமலில் உள்ள வேக வரம்புகள் விரைவில் உயர்த்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேகமான பயணம் நடைபெறும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.