மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்  ஒருசில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளதால் வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களிலேயே தரப்படுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அவர், தனி நபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை. கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம். நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறக்கப்பட்டுள்ளது என்றார்.