மோடி அரசானது வரிசெலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் புது வரி விதிப்பில் 2 புதிய சலுகைகளை வழங்கி இருக்கிறது. முன்னதாக புது வரி விதிப்பில் மக்கள் பெரியளவில் விலக்கு பலனை பெறவில்லை. எனினும் இனி புது வரி விதிப்பு முறையிலும் கூட, சம்பளம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் ரூபாய்.50,000-க்கான ஸ்டாண்டர் ட்டிடக்ஷன் பலனை பெறுவர்.

அதோடு ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி விலக்கு மற்றும் ரூ.50 ஆயிரம் ஸ்டாண்டார்ட் டிடக்ஷன் உள்ளிட்டவற்றுடன், ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சத்திற்குள் பெறும் மக்கள் எவ்வித வரியும் செலுத்தவேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புது அறிவிப்புகள் வாயிலாக மக்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி வருமான வரித்துறை, வரி செலுத்துபவருக்கு வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) எனும் புது அறிக்கையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இவை வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யக்கூடிய செயல்முறையை ஈஸியாக்கும். AIS என்பது நீங்கள் மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையாகும் மற்றும் பல நிறுவனங்களால், பெரும்பாலும் நிதி நிறுவனங்களால் வரித் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் மேலும் நினைவூட்டல்களை தடுப்பதற்கு வரி செலுத்துவோர் புது வருடாந்திர தகவலறிக்கையை பயன்படுத்தி அதை சமர்ப்பிக்கும் முன் வருமான வரிக் கணக்கை சரிபார்க்கலாம்.