
மத்திய பிரதேஷ் மாநிலம் உமரியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் – ஷாலினி தம்பதி. ஷாலினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்து உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஷாலினியை வந்து பார்த்தபோது அவரது உடல் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அங்கிருந்த சூழலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் ஷாலினியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல மாதங்களாக தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் மாமனார் மாமியார் தான் தங்கள் மகளை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஷாலினியின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் இரண்டு நாத்தனார் என ஐந்து பேரும் தலைமுறைவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து ஐந்து பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.