
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 166 பேரின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு முடிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் முண்டகையில் வசிக்கும் ஷகிரா என்ற பெண்ணுக்கு பெரிய ஆபத்து வர போகிறது என உள்ளூணர்வு சொன்னதால் தன் கணவர் மற்றும் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் மனதில் தோன்றியது போலவே பெரும் கோரம் அரங்கேறியது. வேறு இடத்திற்கு சென்றதால் ஷகிரா மற்றும் குடும்பத்தார் உயிர் பிழைத்தனர்.