
நடிகர் விக்ரமின் வீரதீரசூரன் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதனை ஒட்டி விக்ரம், படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தியேட்டர்களில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள். இந்த ஈரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் விக்ரம், இயக்குனர் அருண்குமார் ஆகியோர் தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது செய்தியாளர்களை சந்தித்து விக்ரம் பேட்டி அளித்தார். அதில்,” படத்தின் காட்சிகள் தியேட்டரில் அதிகப்படுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. படத்தின் பகுதி ஒன்று விரைவில் வரும். ரசிகர்களுக்காக எடுத்த இந்த படம் இந்த அளவிற்கு மக்களுடைய சென்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர், விக்ரமை பார்த்து உங்களைப் போன்ற வயதாகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், வயதாகிறது நல்லது தான். வயதாகாமல் இருப்பதற்கு சனிக்கிழமை தோறும் ஒரு கழுதை பால் குடிக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.