திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களில் புதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதே போல் கழிப்பறை, குடிநீர் உள்ள அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே வனத்துறையினர் காட்டுப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகளை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி சுற்றுலா இடங்களில் பயோ கழிப்பறைகள், வாகனம் நிற்கும் இடங்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் இன்று முதல் தொடங்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகு சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.