இந்திய ரயில்வே 2023-24 நிதி ஆண்டில் நாட்டின் உள்நாட்டு செமி-அதிவேக வந்தே பாரத்தின் மேலும் 2 பதிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, வெள்ளை மற்றும் நீல வண்ண ரயிலின் 2 பதிப்புகள் பிப்ரவரி 2024-ம் வருடத்திற்குள் வெளியிடப்படும். இந்த புது யுகத்திற்கான ரயில்களின் அறிமுகத்துடன், இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் எனில் மிகையில்லை. இப்போது நாட்டில் வந்தே பாரதத்தின் ஒரே ஒரு பதிப்பு மட்டுமே இருக்கிறது வந்தே நாற்காலி கார். இந்த நிதியாண்டில் 2 புது பதிப்புகளை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டு உள்ளது. அதாவது வந்தே மெட்ரோ மற்றும் வந்தே ஸ்லீப்பர் ரயில்கள் ஆகும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளின் அனுபவத்தினை மேம்படுத்தி இருக்கிறது. ராஜதானிகள், சதாப்திகள் மற்றும் உள்ளூர் ரயில்களுக்கு பதில் இந்த ரயில்கள் தயாராகி வருகிறது. இப்போது இந்த 3 பதிப்புகளும் சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயானது 3 வெவ்வேறு வழித்தடங்களில் வந்தே பாரதின் வெவ்வேறு பதிப்புகளை இயக்கும். அந்த வகையில் வந்தே பாரத் நாற்காலி கார் பதிப்பு 100 கி.மீ முதல் 550 கி.மீ தூரம் வரை இயங்கும். வந்தே மெட்ரோ 100 கி.மீ குறைவான தூரத்தில் இயங்கும்.

3-வதாக வந்தே ஸ்லீப்பர் கார் வடிவம் 550 கி.மீ-களுக்கு மேலான பயணத்திற்கு இயக்கப்படும். நடப்பு நிதியாண்டின் இறுதியில் அதாவது பிப்ரவரி அல்லது மார்ச் 24க்குள் வந்தே மெட்ரோ மற்றும் வந்தே ஸ்லீப்பர் ஆகிய இரண்டு பதிப்புகளையும் அறிமுகப்படுத்த ரயில்வே இலக்கு வைத்திருக்கிறது. அண்மையில் இந்திய ரயில்வே மும்பையிலுள்ள புறநகர் ரயில்களை வந்தே மெட்ரோ பதிப்பில் மேம்படுத்த முடிவுசெய்துள்ளது. வந்தே மெட்ரோவின் தொடக்கம் தினமும் பயணிகளுக்கு பாதுகாப்பான, சிறந்த, துரிதமான மற்றும் வசதியான பயணங்களை வழங்கும்.