
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக தெரிவித்திருக்கிறார். தற்போது வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. 24 மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில், 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில்,படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது