தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் அவருடைய அரசியல் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரமும் வழங்கியுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் முதல் மாநாட்டினை விஜய் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். நடிகர் விஜயின் முதல் மாநாடு முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அதைப்பற்றிய பேச்சுக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. நடிகர் விஜய் சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்தி முடித்த நிலையில் அதன் பிறகு விவசாயிகளை அழைத்து அதாவது நிலம் கொடுத்து விவசாயிகளை அழைத்து விருந்து மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ முதல் மாநாடு நடந்த சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது திமுக கொடியுடன் ஒரு கார் வருகிறது. அந்த காரை மறித்த தமிழக வெற்றி கழகத்தினர் உடனடியாக காரில் இருந்த திமுக கொடியை கழற்றினர். பின்னர் அதில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தலைவன் கொடி பறக்க வேண்டிய இடத்தில் வேறு எந்த கொடியும் பறக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளனர்.