ராமர் கோவில் திறப்பு விழாவின் போது தமிழக கோவில்களில் நேரடி ஒளிபரப்பவும் பூஜைகள் செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளதாக பாஜகவினர் குற்றசாட்டை எழுப்பினர். ஆனால் அவ்வாறு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் பாஜகவின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாக செயல்படுகின்றனர்.

முதல்வர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒரு வதந்தியை வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் பரவச் செய்து அதை உண்மை போல ஆக்கும் பணியை பாஜக செய்து வருகிறது என கூறியுள்ளார்.