பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில்  சில தினங்களுக்கு முன் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு  மயங்கி விழுந்து கிடந்தார். இதனையடுத்து மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்தது மருத்துவ பரிசோதனை தெரிய வந்தது. பின்னர் அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியோடு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கல்பனா. அதில், என்னை பற்றியும், என் கணவர் பத்தியும் தப்பா வதந்தி பரப்புறாங்க. நான் இந்த வயசுலேயும் நிறைய படிச்சிட்டு இருக்கேன்.

மியூசிக்குலேயும் கவனம் செலுத்திட்டு வரேன். அதனால நான் சரியா தூங்காம இருந்ததால stress அதிகமாகி மருத்துவர் பரிந்துரையின்படி மாத்திரை எடுத்துக்கொண்டேன். அந்த மாத்திரையை அன்று அதிகமாக எடுத்ததால் சுயநினைவை இழந்து விட்டேன். இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் என் கணவர் தான் அதற்கு காரணம். என்னை காப்பாற்ற அவ்வளவு கஷ்டப்பட்டார். ” என்று கூறியுள்ளார்.