ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். இதனைத்தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்த பின் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில், ‘வணக்கம் சென்னை’ என தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை சென்னை வரும் போதெல்லாம் எனக்கு சக்தி வருகிறது. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றின் முக்கிய புள்ளியாக சென்னை விளங்குகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு சென்னை வாசிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. எனக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மக்களின் ஆதரவு பெருகி வலிமை அடைந்து வருவதால் சிலருக்கு எனது வருகை பயத்தை தருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்துடன் வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு எனது இலக்கு .

இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக்க தமிழகத்தின் பங்களிப்பு அவசியம். சென்னை மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டங்கள் முக்கியம். மத்திய அரசின் திட்டங்களால் சென்னையில் புதிய கட்டுமானங்கள் பெருகி உள்ளது” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசி வருகிறார்.