நடிகர் வடிவேலுவின் காமெடி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் அவரின் ஏதோ ஒரு காமெடி டயலாக்கை சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய நகைச்சுவையால் மக்களோடு மக்களாக கலந்து விட்டார் .அவர் மீது தனிப்பட்ட முறையில் பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. அப்படியான வடிவேலுவின் காமெடி ஒரு பெண்ணை கோமாவில் இருந்து விழிக்க செய்தவர்கள்.

இதுகுறித்து வடிவேலு சமீபத்தில் பேசிய பேட்டியில், கோமாவில் இருந்த 11 வயது சிறுமியின் டாக்டர் அவருடைய பெற்றோரிடம் இந்த குழந்தை என்ன ரொம்ப பிடிக்கும் என்று கேட்க பெற்றோர்கள் அவளுக்கு வடிவேலு காமெடிகளை பிடிக்கும் என்று கூறியுள்ளார்கள். உடனே வடிவேலுவின் காமெடி காட்சிகளை அந்த சிறுமிக்கு போட்டுக்காட்ட டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். சுமார் 40க்கும் மேற்பட்ட காமெடி காட்சிகளை போட்டு காட்டிய நிலையில் சிறுமி கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி மற்றும் அவருடைய பெற்றோர்கள் வடிவேலுவை நேரில் பார்த்து நன்றியும் தெரிவித்துள்ளனர்.