மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவருடைய நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வெளியான படம் லூசிபர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமானது தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு எல்2 எம்பிரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டோமினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.  இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படம்  வருகிற 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படமானது திரைக்கு வரவிருக்கும் நிலையில், படம் வெற்றி பெற வேண்டி மோகன்லால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் தன்னுடைய பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார். மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் பரவிய நிலையில் அது வதந்தி என்றும் நடிகர் மம்மூட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.