இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கியில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் மற்றும் இமெயில் மூலம் முக்கிய தகவல்களை அனுப்பி வருகிறது. அதன்படி வங்கியின் மொபைல் ஆப் வசதியை இனி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. சைபர் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக மொபைல் செயலியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எனவே புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய மொபைல் வங்கியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் வங்கியின் பதிவு செய்யப்பட்ட மொபைலில் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போலவே புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள செயலியின் மூலம் அதிக இணைய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் இதனால் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.