பொதுவாகவே மக்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கிகளில் உள்ள லாக்கர் பயன்பாட்டு திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் விலை உயர்ந்த மற்றும் முக்கியமான ஆவணங்கள் என அனைத்தையும் பாதுகாப்பாக வைக்கின்றனர். இதற்காக வாடிக்கையாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் கேஒய்சி ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவிலான கட்டணத்தை வசூல் செய்கின்றன.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வங்கியில் ஆக்கர் ஒப்பந்தங்களுக்கு புதிய விதிமுறைகளை தற்போது விதித்துள்ளது. அதன்படி மங்கில் ஆக்கர் பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 31ம் தேதிக்குள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். இந்த புதிய ஒப்பந்தங்களின்படி வாடிக்கையாளர்கள் மட்டுமே வங்கியில் ஆக்கறை அணுக முடியும். அவரின் குடும்பத்தினர்கள் உட்பட வேறு யாரும் மங்கிராக்கரை அணுக முடியாது. வங்கி லாக்கரில் ஆயுதங்கள், பணம், வெளிநாட்டு நாணயம், மருந்துகள் மற்றும் கொடிய நச்சுப் பொருட்கள் ஆகியவற்றை வைக்க முடியாது.

வங்கியில் லாக்கர் கடவுச்சொல் அல்லது சாவி தொலைந்து விட்டால் இதற்கு வங்கி எக்காரணத்தைக் கொண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளாது. ஆனால் வாடிக்கையாளர்களின் பொருட்களின் பாதுகாப்புக்கு வங்கி முழு உத்திரவாதம் வழங்கும். லாக்கரில் உள்ள பொருட்கள் காணாமல் போனால் அல்லது அழிந்துவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் லாக்கர் கட்டணத்தை விட 100 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். வங்கியில் லாக்கரில் வாடிக்கையாளர்களின் நகைகள், முக்கியமான ஆவணங்கள் மற்றும் சட்டபூர்வமாக செல்லுபடியாக பொருட்களை மட்டுமே வைத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.