இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக மாநில அரசுகளும் ஆலோசனை செய்து வருகின்றன. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் யுனைடெட் போரம் மற்றும் வங்கி யூனியன்கள் இடையே நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 100% அகலவிலைப்படி அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் 800 ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் உயர்த்தப்படும். இதன் மூலமாக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.