
நொய்டாவில் உள்ள நைனிடால் வங்கியின் சர்வரை ஹேக் செய்து ரூ.16.71 கோடி திருடிய சம்பவம் தொடர்பாக 29 வயதான ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷ் பன்சால் என்பவர். இவர் பாஜகவின் யுவ மோர்ச்சா மாநகர தலைவர். இந்த சம்பவம் கடந்த ஜூன் 16 முதல் 20 வரை நடந்துள்ளது. திருடப்பட்ட பணத்தில் ரூ.2.8 கோடி ஸ்திரீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் ஹர்ஷின் சகோதரர் சுபம் பன்சால் தலைமறைவாக உள்ளார். ஹர்ஷ் தனக்கு கிடைத்த 6 லட்சம் ரூபாயை கடனுக்கு பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வங்கியின் IT மேனேஜர் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் புதிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.