
வங்காள தேசத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஷேக் ஹசீனா மாளிகையை கலவரக்காரர்கள் சூறையாடினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்காளதேசத்தின் முதல் பிரதமருமான முஜிப்பூர் ரகுமான் சிலை அங்கு உள்ளது.
இந்த சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர். அதற்கு முன்னதாக போராட்டக்காரர்களில் ஒருவர் சிலை மீது அமர்ந்து சிறுநீர் கழித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வங்கதேசத்தின் தந்தை என்று அவர் போற்றப்பட்ட நிலையில் அவருடைய சிலையை இப்படி அவமதித்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.