மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது இரவு 8 மணிக்குள் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து வங்கதேசம் அருகே வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. இந்த புயலின் காரணமாக கிழக்கு கரையோர மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.