மெய்யழகன் தெலுங்கு பட புரொமோஷனில் “இங்கு லட்டு பற்றி பேச வேண்டாம்” ; என்று கூறியிருந்தார். இதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ; இது என்ன காமெடியான விஷயமா என்று தனது கண்டனத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி, லட்டு விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது X  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்மீது மிகுந்த மரியாதையை வைத்திருப்பதாக தெரிவித்தார். , தன்னைப் பற்றிய தவறான புரிதல் ஏற்பட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கார்த்தி தனது பதிவில், “நான் எப்போதும் மரியாதை மற்றும் மரபுகளைப் பேணிப் பாதுகாக்கும் ஒருவன். என்னுடைய கருத்துகள் எதிர்பாராத விதமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்காக நான் மனமாற்றமின்றி மன்னிப்பு கோருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“>

 

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாணின் ஆதரவாளர்கள் கார்த்தியின் பதிலை உற்சாகத்துடன் எதிர்கொண்டாலும், சிலர் மேலும் விளக்கங்களை எதிர்பார்க்கின்றனர்.