டெல்லியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது செல்ல நாய் சார்லியை பாசமாக வளர்த்து வந்தார். ஆனால் ஒருநாள் அந்த நாய் திடீரென காணாமல் போனது. இதனால் மனமுடைந்த வாலிபர், சார்லியை தேடுவதற்காக நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டிக் காணொலி விளம்பரங்கள் மூலம் தகவல் சேகரிக்க முயற்சி செய்தார். தொடர்ந்து பல இடங்களில் விசாரித்தும் பலனின்றி தேடிக்கொண்டிருந்த அவர், ஒரு நாள் சார்லி உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இருப்பதாக தகவல் பெற்றார்.

உடனே அங்கு சென்ற அந்த வாலிபர், சார்லி இருப்பதாக கூறப்பட்ட இடத்தை அடைந்தார். அங்கு வந்தவுடன், வாலிபரை பார்த்ததும் நாய் சார்லி ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்து தனது பாசத்தை வெளிப்படுத்தியது. அந்த நெகிழ்ச்சிகரமான தருணத்தை அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி, மனிதனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள  பாசத்தின் சிறந்த உதாரணமாக பாராட்டப்பட்டு வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jist (@jist.news)