திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்து வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ரூ.300 கட்டணம் டிக்கெட்டில் மூன்று மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம் . ஆனால் இந்த டிக்கெட்டை பெறுவதும் அவ்வளவு எளிதல்ல. திருப்பதி தேவஸ்தானம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிடும்  இந்த 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன கட்டண டிக்கெட் கிடைக்கும்.