எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வகையான மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. தன்னுடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது. அதில் ஒரு வகையான மோசடிகளை தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகளை கூறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், SBI வங்கியின் பெயரில் பலமுறை மோசடி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு பணம் பறிப்பு நடைபெறுகிறது.

எங்களிடமிருந்து எந்த செய்தி வந்தாலும் அதில் SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB  என்ற முக்கியமான குறியீடுகள் இருக்கும் . இந்த குறியீட்டோடு நீங்கள் ஒரு செய்தியை பெற்றால் அது வாங்கிஇடம் இருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ  செய்தி. வேறு எப்படியாவது வந்தால் அது மோசடியாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.